Perambalur: School bus overturns in roadside ditch, causing accident: No injuries, public blocks road!

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், பாடாலூரில், செயல்பட்டு வரும் தனியார் மேல்நிலைப் பள்ளிக்கு சொந்தமான பஸ் 50 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுடன் பாடாலூரிலிருந்து- கொளக்காநத்தம் கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள அயனாபுரம் கிராமத்தில் மாணவ மாணவிகளை இறக்கிவிட சென்ற நிலையில், எதிரே வந்த இருசக்கர வாகனத்திற்கு வழி விட்டதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள்ளத்திற்குள் இறங்கி விபத்துக்குள்ளானது.

இந்த திடீர் சாலை விபத்தில் சிறு காயங்கள் கூட ஏதுமின்று பள்ளி மாணவ மாணவிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதற்கிடையே பள்ளி பேருந்து விபத்துக்குள்ளான தகவல் அறிந்து அங்கு திரண்ட மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பேருந்திற்குள் சிக்கித் தவித்த மாணவ மாணவிகளை பாதுகாப்புடன் மீட்டதோடு, ஆத்திரமடைந்து அயனாவரம் பிரிவு சாலை பகுதியில் பேருந்துகளை சிறை பிடித்து தங்களது கிராமத்திற்கு செல்லும் குறுகலான சாலையை அகலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வருவாய்த் துறையினர் உள்ளிட்ட பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர். பொதுமக்களின் இந்த திடீர் போராட்டத்தால் பாடாலூர்- கொளக்காநத்தம் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!