Perambalur: School students came to the Sub-Collector with their parents and petitioned for road facility!
பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடி பேரூராட்சிக்கு உட்பட்டது. அரசடிக்காடு. அங்கு வசிக்கும் மக்கள் ஒன்று திரண்டு தங்கள் நிலத்திற்கும் சென்று வர ஒவ்வொரும் தங்கள் நிலத்தில் பாதை அமைத்து கொடுத்தும், சிலருக்கு பாதைக்கான ரொக்கமும் கொடுத்ததாகவும், அதில் சிலர் தங்கள் பட்டா நிலத்தில் பாதை ஒதுக்கி கொடுப்பதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், பாதையை மறித்தும், தடங்கல் செய்து உள்ளதாகவும், கூறப்படுகிறது.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் நடந்து வரும் வேளையில், தற்போது பள்ளிகள் திறந்து உள்ளதாலும், அறுவடை பொருட்கள், பால் உள்ளிட்டவைகளை அப்குதியில் வசிப்பவர்கள் எடுத்து செல்லவும், பள்ளி வாகனங்கள் மாணவர்களை ஏற்றி, வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்று சார் ஆட்சியர் கோகுலிடம் மனு கொடுத்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட சார் ஆட்சியர் கோகுல், டி.ஆர்.ஓ வடிவேல்பிரபு ஆகிய இருவரும் இந்த பிரச்சனைக்கு எப்படி தீர்வு காண்பது என ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சீருடையுடன் இன்று மாணவர்கள், பெற்றோருடன் மனு கொடுக்க வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஒரு சுமூக முடிவை எட்டி அரசடிக்காடு மக்களுக்கு நீண்ட நாளை இந்த பாதை பிரச்சனையில் ஓர் முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பதே பூலாம்பாடி சுற்று வட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.