Perambalur: Science exhibition of students in government school!
பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் அரசு ஆதிந உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி இன்று, பள்ளித் தலைமை ஆசிரியர் த. மாயக்கிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
லாடபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வாகிதா பானு, அறிவியல் ஆசிரியர்கள் ஜெயகாந்தன், சாந்தி , ஈச்சம்பட்டி அரசு ஆதிந உயர்நிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியர் எச். இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர்கள் செல்வராணி, சின்னசாமி, பாலச்சந்திரன் சிலம்பரசி, அருணா எஸ்.எம்.சி தலைவர் இந்திராணி ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவர்களின் படைப்புகளை காட்சிப்படுத்தினர். தொடக்கப் பள்ளி மாணவர்கள் மற்றும் லாடபுரம் பொதுமக்கள் பார்வையிட்டு மாணவர்களை ஊக்கப்படுத்தினர்.