Perambalur : Selection of new administrators for Town Soliya Velalar Sangam
பெரம்பலூர் நகர சோழிய வேளாளர் சங்க சிறப்பு கூட்டம், கர்ணம் சுப்பிரமணிய திருமண மண்டபத்தில் கவுரவ தலைவர் கணபதி முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டது. இதில் புதிய நிர்வாகிகளாக தலைவர் சு.பாலகிருஷ்ணன், துணைத் தலைவராக தெ.பெ.வைத்தீஸ்வரன், செயலாளர் முருகேசன், இணை செயலாளர் ம.சிவசங்கர் மற்றும் ப.சண்முகம் பொருளாளர் க.பாஸ்கரன் ஆகியோர் சமூகத்தினரால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா விரைவில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.