Perambalur: Sep 18 in Kunnam Taluk. On “Ungalai Thedia Ungal Ooril ” camp; Collector Information!

Perambalur Collector Grace Pachuau
தமிழக முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் வட்ட அளவில் பிரதி மாதம் 3வது புதன்கிழமை கலெக்டர் உள்ளிட்ட அனைத்து மாவட்ட முதல் நிலை அலுவலர்கள் கிராமங்களில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்தும், மக்களின் குறைகளைக் கேட்டறிந்து மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
வரும் செப்டம்பர்-18 புதன் கிழமையன்று “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின்படி பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் முகாம் நடைபெறுகிறது.
அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்ய ஆய்வு மேற்கொள்ளும் பொருட்டு பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளில் எதிர்வரும் 18.09.2024 புதன்கிழமை அன்று கலெக்டர் மற்றும் அனைத்து மாவட்ட முதல் நிலை அலுவலர்கள் கிராமங்களில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்தும், மக்களின் குறைகளைக் கேட்டறிந்து மனுக்கள் பெறவுள்ளனர். அதுசமயம் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்திற்குட்பட்ட கிராம பொதுமக்கள் தங்கள் கிராமத்திற்கு ஆய்வுகள் மேற்கொள்ள வரும் மாவட்ட நிலை அலுவலரிடம் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை மற்றும் தங்கள் கிராமத்திற்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளையும் மனுக்களாக அளித்து அளித்து பயன்பெறுமாறு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.