Perambalur: Service Deficiency; Consumer Court orders Ola electric scooter company to pay compensation of Rs.50 thousand!

2 மாதம் கழித்து டெலிவரி செய்யப்பட்டது. மின்சார ஸ்கூட்டர் ஒருவருடம் ஆன நிலையில் கடந்த 17.01.2024 அன்று ஓலா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 4.0 வெர்சன் சாப்ட்வேர் அப்டேட் செய்தனர். அப்போது ராஜன்குருராஜ் தனது மின்வாகனத்தை சார்ஜ் செய்த நிலையில் பேட்டரியில் பழுதுஏற்பட்டது.

மின்சார ஸ்கூட்டரை தொடர்ந்து ஓட்ட முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து, ஓலா நிறுவனத்தின் திருச்சியில் உள்ள எக்ஸ்பீரியன்ஸ் மையம் மற்றும் கிருஷ்ணகிரியில் உள்ள ஓலா தலைமை அலுவலத்திற்கு மின்அஞ்சல் மற்றும் வாட்ஸ்ஆப் மூலம் புகார் செய்தார்.

இநிலையில் பழுதான மின்சார ஸ்கூட்டரை உடனே பழுதை நீக்கி தருமாறு வாடிக்கையாளர் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் 15 நாட்கள் கழித்து ஓலா நிறுவனத்தின் தொழில்நுட்ப பணியாளர் நேரில் வந்து பழுதான அதை ஆய்வு செய்து, பேட்டரியில் பழுது ஏற்பட்டு இருப்பதாகவும், அதனை மாற்றிதருவதற்கு 2 வாரம் ஆகலாம் என வாய்மொழியாக பதில் தெரிவித்துள்ளார். ஆனால் 2 வாரம் ஆகியும் பழுதான பேட்டரிக்கு பதிலாக புதிய பேட்டரியை மாற்றித்தர ஓலா நிறுவனத்தினர் முன்வரவில்லை.

இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான ராஜன்குருராஜ், இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் தனது வழக்கறிஞர் சீனிவாசமூர்த்தி மூலம் 15.02.2024 அன்று ஓலா நிறுவனத்தின் முதன்மை செயல்அலுவலர் , திருச்சி சாலைரோட்டில் உள்ள ஓலா எக்ஸ்பீரியன்ஸ் மையத்தின் பொறுப்பாளர் ஆகியோர் மீது புகார் மனுசெய்து வழக்கு தொடர்ந்தார்.

இதனிடையே ஓலா நிறுவனத்தினர், மனுதாரரின் பழுதான மின்வாகனத்தின் பேட்டரியை 44 நாட்கள் கழித்து புதிதாக மாற்றித் தந்தனர். இந்த வழக்கை பெரம்பலூர் நுகர்வோர் குறைதீர்க்கும்ஆணைய நீதிபதி ஜவஹர், மற்றும் உறுப்பினர்கள், திலகா மற்றும் முத்துகுமரன் ஆகியோர் பகுதியாக அனுமதித்து விசாரணை நடத்தினர்.

விசாரணை முடிவில் ஓலா நிறுவனத்தினரின் சேவைகுறைபாடு மற்றும் மனுதாரருக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியமைக்கு ரூ.50ஆயிரம் நிவாரணத்தொகையும், ரூ.10ஆயிரத்து வழக்கு செலவுத்தொகையும் தீர்ப்பு வெளியான 45 நாட்களுக்குள் வழங்கவேண்டும். அவ்வாறு 45 நாட்களுக்குள் வழங்காவிட்டால் அதற்குரிய வட்டி 8 சதவீதம் தொகையையும் சேர்த்துவழங்கவேண்டும் என்று நுகர்வோர் குறைதீர்க்கும்ஆணையம் உத்திரவிட்டது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!