Perambalur: Sexual harassment of girl; The court sentenced the convict to life imprisonment and a fine of Rs 50,000!
பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கடந்த 2021-ம் ஆண்டு சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக சிறுமியின் உறவினர் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் மாவட்டம், தொண்டைமாந்துறையை சேர்ந்த லட்சுமணன் மகன் நாகேஷ் @ சுப்ரமணி @ மாணிக்கம் (57) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கின் விசாரணை முடித்து குற்ற இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து, நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. வழக்கில் இன்று குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளியான நாகேஷ் @ சுப்ரமணி @ மாணிக்கத்திற்கு ஆயுள் தண்டனையுடன் ரூ. 50 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால், மேலும், ஓராண்டு சிறை என்றும் பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். பின்னர், போலீசார், நாகேஷ் @ சுப்ரமணி @ மாணிக்கத்தை சிறையில் அடைத்தனர்.