Perambalur: Shooting training for the police!
பெரம்பலூர் போலீஸ் சூப்பிரண்டு ச.ஷ்யாம்ளா தேவி தலைமையில், மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கான வாராந்திர கவாத்து பயிற்சி நடந்தது.
இதில், உடற்பயிற்சி, கவாத்து பயிற்சியும், மேலும், டி.எஸ்.பி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர்களுக்கு 9 mm பிஸ்டல் துப்பாக்கியை முற்றிலும் கழட்டி மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவரும் (Stripping and assembling) பயிற்சி அளிக்கப்பட்டது.
போலீசார், ஒவ்வொருவரும் பொறுப்புணர்வோடு பணியாற்ற வேண்டும், அதோடு உடல்நலத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும், போலீசாரின் குறைகளை கேட்டறிந்து அதனை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் எஸ்.பி தெரிவித்தார்.
இதில், டி.எஸ்.பி வளவன், ஆயுதப்படை டி.எஸ்.பி சோமசுந்தரம் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், ஆயுதப்படை போலீசார் கலந்து கொண்டனர்.