Perambalur: Showers; Farmers preparing for Aadi season! People suffering from water shortage are happy!
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று மாலை திடீரென பெய்த மழையால் விவசாயிகள் நகரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகப்படியாக மானாவாரி பயிர்களான மக்காசோளம், பருத்தி, தானிய வகைகள் அதிக அளவு பயிரிடப்படுகிறது. இந்த பயிர்கள் ஆடிப்பட்டத்திலேயே விதைக்கப்படும். கடுமையான வெயில் வாட்டி வந்த நிலையில், இன்று மாலை திடீரென பெய்த தென்மேற்கு பருவ மழையால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே ஆடிப்பட்டத்திற்காக விவசாயிகள் விதைப்பு செய்வதற்காக உழுது மண்ணை பதப்படுத்தி சமன் செய்து வைத்துள்ளனர் இந்நிலையில் மழை பெய்ததால் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெரம்பலூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்து விட்டதால் குடியிருப்பு வாசிகள் வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள், டீக்கடைகள் தண்ணீர் தட்டுப்பாட்டால் கடும் அவதிப்பட்டு வரும், வேளையில் இந்த மழை அவர்களுக்கு சற்று ஆறுதலாக உள்ளதால் அவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.