Perambalur: Siruvachur Almighty Vidyalaya Public School is a model; Perambalur MLA praises it!
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில், ஒலிம்பியாட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா, சீனியர் கே .ஜி முடித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா, மகளிர் தின விழா என முப்பெரும் விழா பள்ளியின் சேர்மன் முனைவர் ஆ.ராம்குமார் தலைமையில் நடந்தது. துணை சேர்மன் மோகனசுந்தரம், பள்ளியின் செயலாளர் சிவக்குமார், மற்றும் பள்ளி நிர்வாகக் கமிட்டியின் உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் கலந்து கொண்டார். பள்ளியில் மகளிர் தினத்தை முன்னிட்டு, கரகாட்டம், நடனம், கேட் வாக், பாட்டுப் போட்டிகள் உள்பட பல்வேறு வகையான போட்டிகள் நடந்தது. அதில் மாணவர்கள், பெற்றோர்ள், ஆசிரியைகள் கலந்து கொண்டு கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்தி அசத்தினர்.
சிறப்புரையாற்றிய பெரம்பலுர் எம்.எல்.ஏ பிரபாகரன் பரிசளித்து மகிழ்வித்தார். பின்னர், அவர் பேசியதன் சுருக்கம்: ஆல்மைட்டி பள்ளி பெரம்பலூர் மாவட்டத்திற்கு முன்மாதிரி பள்ளியாக திகழ்கிறது. பெண்கள் மேடைக்கு வருவதே பெரிய சாதனைதான். மேலும், அதிலும், இவ்வளவு திறமை உள்ளவர்களாக இருக்கிறார்கள். நமது, கலாச்சார கரகாட்டம் முதல், வெஸ்டர்ன் டான்ஸ் வரை சிறப்பாக நிகழ்த்தி காட்டினர். அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் என தெரிவித்தார். முன்னதாக சீனியர் கே .ஜி முடித்த மாணவர்களுக்கு பட்டமளித்தார். பின்னர், ஒலிம்பியாட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.
பெரம்பலூர் லட்சுமி மருத்துவமனையின் டாக்டர் எஸ்.டி ஜெயலட்சுமி விழாவில் கலந்து கொண்டு பேசியதன் சுருக்கம் : பெண்கள் சமையற்கட்டை விட்டு வெளியே வரவேண்டும் அதற்கு காமன் (Common ) கிட்சன், கிளவுட் கிட்சன் கொண்டு வர வேண்டும். பெண்கள் தற்போது, அதிக அளவில் பணிக்கு செல்வதால், இது அவர்களின் பெருமளவு பணிச்சுமையுடன் மனச்சுமையையும் குறைக்கும் என பேசினார்.
பெரம்பலூர் தனியார் பள்ளியின் மாவட்ட கல்வி அலுவலர் கே. லதா விழாவில் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினார்.
பள்ளியின் முதல்வர்கள் சாரதா, சந்திரோதயம் , துணை முதல்வர் ராஜேந்திரன், மேல்நிலை வகுப்புகளின் கல்வி இயக்குனர் கார்த்தி ஆகியோர் விழாவை முன்னின்று நடத்தினர். முப்பெரும் விழாவில் பெற்றோர்கள், மாணவர்கள், போட்டிகளில் பங்கு பெற்ற பெண்களும், திரளாக வந்திருந்தனர். ஆடல், பாடல், இசைப்போட்டி, ரேம் வாக் , காய்கறி மூலம் பதார்த்தங்கள், பழங்கள் மூலம் பதார்த்தங்கள், என பல்வேறு போட்டிகளில் நடந்தது. ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மெஸ் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களும், விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பிக்க பணி செய்தனர்.