Perambalur: Siruvachur Goat Market today sold Rs. Selling for 7 crores!
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும், ஆட்டுச் சந்தை நடப்பது வழக்கம்.
இன்று அங்கு ஆடுகள், நாட்டுக்கோழி, அதிகாலை 3 மணி முதல் விற்பனைக்கு பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் கால்நடை வளர்ப்பவர் கொண்டு வருவார்கள்.
இந்நிலையில் வருகிற 17ந் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் இன்று அதிகாலை சுமார் 3 மணிக்கே ஆட்டுச் சந்தை கூடியது. சந்தையில் பெரம்பலூர், வாலிகண்டபுரம், லப்பைக்குடிக்காடு, வி.களத்தூர், அரும்பாவூர், வீரகனூர், பூலாம்பாடி, ஆத்தூர், தலைவாசல், உடும்பியம், விசுவகுடி, முஹம்மதுபட்டினம், டி.களத்தூர், அரியலூர், துறையூர், மணப்பாறை, திண்டுக்கல், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து ஆடுகளை வாங்க வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் வந்தனர்.
ஆட்டுச் சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செம்மறி ஆடுகள் விற்பனை படுஜோராக நடந்து. ஆடுகளை வியாபாரிகள் போட்டிப் போட்டு வாங்கி சென்றனர். 20 – 30 கிலோ வரையிலான ஆடுகள் அதிக அளவில் சந்தைக்கு
கொண்டுவரப்பட்டன.
இன்று நடைபெற்ற சிறுவாச்சூர் ஆட்டுச் சந்தையில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி சுமார் 7 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை செய்யப் பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும், ஆடுகள் உயிர் எடையில் சுமார் ரூ. 280ல் இருந்து 380 வரை விற்பனையானது.