Perambalur: Skill development training for rural youth on Poultry Farming!

 பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண்மைத்துறை மூலம் கோழி வளர்ப்பு மற்றும்  மேலாண்மை குறித்து கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி 06 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

18 முதல் 40 வயது வரையுள்ள குறைந்தபட்சம் 5-வது வரை படித்துள்ள கிராமப்புற இளைஞர்கள் கலந்து கொள்ளலாம். 6 நாட்கள் நடக்கும் இப்பயிற்சி காலை, மாலை இரு வேளைகளிலும் நாளொன்றுக்கு 6 மணி நேரம் வீதம் மொத்தம் 36 மணி நேரம் வகுப்பறை பாடம் மற்றும் செயல்முறை பாடமாக நடத்தப்படும். இப்பயிற்சி செங்குணம் கைகாட்டி எதிர்புறம் உள்ள கால்நடை பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெறவுள்ளது. இப்பயிற்சியானது அந்தந்த துறையைச் சார்ந்த அலுவலர்களால் நடத்தப்படும்.

 இப்பயிற்சியானது சமிதி / அட்மா மூலமாக இந்திய அரசின் வேளாண்மை - உழவர் நலத்துறை / மேனேஜ் நிதி உதவியின் கீழ் நடத்தப்படுகிறது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தகுதியுள்ள இளைஞர்கள்/மகளிர் அதற்கான பதிவுகளை 31.07.2024-க்குள் செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இப்பயிற்சிக்கு முதலில் பதிவு செய்யும் 28 தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பயிற்சி வழங்கப்படும்.
மேலும், கல்வி தகுதிக்கான சான்றிதழ், வயது வரம்பிற்கான ஆவணம், ஆதார் கார்டு,  ரேஷன் கார்டு மற்றும் புகைப்படம் 2 எண்கள் ஆகியவற்றுடன் அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குநர்கள்/ வேளாண் துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) பெரம்பலூர் அலுவலகத்தை, 6383439144 என்ற அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பதிவு செய்திட வேண்டும்.
பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படும் 28 தகுதியான இளைஞர்கள் 6 நாட்கள் காலை, மாலை இருநேர பயிற்சியில் தவறாது கலந்து கொள்ள வேண்டும். 80% வருகை உள்ளவர்களுக்கே பயிற்சி முடிவில் தேர்வு நடத்தப்படும். தேர்வில் 70 மதிப்பெண் பெற்று தேர்வானவர்களே தேர்ச்சி பெற்றவர்களாக கருதி அவர்களுக்கு மட்டுமே சான்றிதழ் வழங்கப்படும். 

எனவே, மேற்கண்ட தகுதி உடையவர்கள் மற்றும் விருப்பமுள்ள இளைஞர்கள்/ மகளிர் இப்பயிற்சியில் கலந்து கொண்டு பயனடையுமாறு வேளாண்மை இணை இயக்குநர் விடுத்துள்ள அறிவிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!