Perambalur: Snake enters temple: Public worships with reverence!
பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூரில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவிலில், நேற்று மாலை நல்ல பாம்பு ஒன்று தஞ்சம் அடைந்துள்ளது. இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள், நல்ல பாம்பு விற்கு பால் ஊற்றி சூடம் ஏற்றி பயபக்தியுடன் வணங்கி வருகின்றனர். கோயிலுக்குள் நல்ல பாம்பு ஒன்று தஞ்சம் அடைந்து கோவிலை விட்டு வெளியே செல்லாமல் கோவிலுக்கு உள்ளேயே சுற்றி வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.