Perambalur: Son-in-law gave money to his father-in-law on interest; Mother of 3 children commits suicide in a bribery case!

பெரம்பலூரில் மாமனாருக்கு வட்டிக்கு பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் 3 குழந்தைகளுக்கு தாயான பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரம்பலூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன், பெரம்பலூரில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சேகர் மகள் பாரதி (34) என்பவருடன் கடந்த 2016ம் ஆண்டு திருமணம் நடந்தது. அதில், தனுஸ்ரீ (6), தர்ஷன் (3), 10 மாத கைக்குழந்ததை சிந்துஜா என 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்நநிலையில், தமிழ்ச்செல்வன் அவரது மாமனாருக்கு, அவர் சம்பாதித்த பணத்தில் ரூ. 2 லட்சத்தை மனைவி பாரதி மூலம் வட்டிக்கு பணம் கொடுத்துள்ளார். இதை அறிந்த தமிழ்ச்செல்வனின் தந்தை தங்கவேல் தனது மகன் தமிழ்ச்செல்வனை கண்டித்துள்ளார். பாரதியை அவரது மாமனார் தங்கவேலுக்கு பிடிக்காத காரணத்தினால் பாரதி எது செய்தாலும் குறை கூறிக்கொண்டே இருப்பார் என்றும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளர். மேலும், இதனால் அவ்வப்போது கணவன் மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

நேற்று 11 மணி அளவில் கணவன் மனைவி இருவரும் நல்ல விதமாக பேசிவிட்டு தூங்க சென்றனர். மீண்டும் இன்று காலை 5.30 மணிக்கு தமிழ்ச்செல்வன் எழுந்து பார்க்கும் பொழுது சமையலறையில் உள்ள கொக்கியில் பாரதி சேலையால் தூக்கு மாட்டி இறந்து தொங்கிக் கொண்டு இருந்துள்ளார். தமிழ்ச்செல்வன் சத்தம் போடவே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வந்து பார்த்து பாரதியை கீழே இறக்கி வைத்துள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாரதியின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். 3 குழந்தைகளின் தாய் தூக்கிட்டு இறந்து போன சம்பவம் இன்று காலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!