Perambalur: Special Business Loan Camp for MSMEs; Collector Info!

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டங்களின் கீழ்கடனுதவி வழங்கி வருகிறது.

திருச்சி கிளை அலுவலகத்தில் (33, K.R.T. பில்டிங் இரண்டாவது தளம், பிராமினேட் ரோடு, கண்டோன்மென்ட், திருச்சி 620001) குறு சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்களுக்கான சிறப்பு தொழில்கடன் முகாம் 19.08.2024 முதல் 06.09.2024 வரை நடைபெற உள்ளது.

இச்சிறப்பு தொழில்கடன் முகாமில் டி.ஐ.ஐ.சி. யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், ஒன்றிய, மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம் மற்றும் இதர மானியங்கள்) புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS), அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன் திட்டம் (AABCS) போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது. தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவிகிதம் முதலீட்டு மானியம் ரூ.150 இலட்சம் வரை வழங்கப்படும்.

இம்முகாம் காலத்தில் சமர்பிக்கப்படும் பொதுகடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை அளிக்கப்படும். இந்த அரியவாய்ப்பினை புதிய தொழில் முனைவோர் / தொழிலதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் ஒன்றிய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் தகவலுக்கு 0431 – 2460498, 2414177, 9443110899, 9445023457 எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!