Perambalur: Special camp for 90 days at the Mediation Center! Information from the Principal District Judge!
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நீண்ட நாள் நிலுவையில் உள்ள தங்கள் வழக்குகளை குறிப்பாக தனி நபர் தகராறு, பண வசூல் தகராறு, குடும்ப தகராறு, சொத்து தகராறு, வாடகை தகராறு, காசோலை தகராறு, மின்சார வாரியம் தகராறு, தொழிலாளர் நலம், உரிமையியல் மற்றும் திருமண உறவு தொடர்பான வழக்குகள், குற்றவியல் வழக்குகள் (சமாதனமாக போக கூடிய வழக்குகள்) ஆகியவற்றில் தீர்வு கண்டு சமரசமாக செல்ல ஓர் அறிய வாய்ப்பாக அமைய உள்ளது.
சமரசம் மையம் முன்பாக வழக்குகளில் சமரசமாக செல்வதால், பொதுமக்கள் தங்கள் வழக்குகளுக்கு சமரச மையத்தில் சுமூகமான தீர்வு காணப்பட்டால், முழு நீதிமன்றக் கட்டணத்தையும் திரும்ப பெறலாம். பொதுமக்கள் தங்கள் பிரச்சனைகளை தாங்களே விரைவாக கையாண்டு, சுமூகமான தீர்வுகளை கட்டணம் ஏதுமின்றி காண முடியும். சமரச மையத்தில் நடைபெறும் அனைத்து பேச்சுவார்த்தைகளும், எவ்வகையிலும் பதிவு செய்யப்படமாட்டாது, இரகசியம் காக்கப்படும். விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை எனும் முதுமொழியின் படி உறவுகள் மேம்பட வழிவகை செய்கிறது. இருதரப்பினருக்கும் வெற்றி என்ற நிலை உருவாகும். சமரச மையத்தில் காணப்படும் தீர்வே இறுதியானது, இதற்கு மேல்முறையீடு கிடையாது.
எனவே சமரசம் செய்வதற்கான அரிய வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்தி, பயன்பெற வேண்டும். இது சம்பந்தமாக தினந்தோறும் சமரசப் பேச்சுவார்த்தை பெரம்பலூர் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கும் சமரச மைய அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என சமரச தீர்வு மைய தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான வி.பத்மநாபன் தெரிவித்துள்ளார்.