Perambalur : Special Educational Loan Camp for College Students; Collector Information!
பெரம்பலூர் மாவட்டத்தில் கல்விக்கடன் வழங்கும் முகாம் 4 இடங்களில் நடைபெறவுள்ளது. யூஜி மற்றும் பிஜி படிக்கும் மாணவ, மாணவிகள் கல்விக்கடன் பெற விண்ணப்பிக்கலாம்.
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 03.09.2024 (செவ்வாய்கிழமை) தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியிலும், 05.09.2024 (வியாழக்கிழமை) ரோவர் இன்ஜினியரிங் கல்லூரியிலும் 10.09.2024 (செவ்வாய்கிழமை) ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரியிலும்; நடைபெறவுள்ளது.
ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 04.09.2024 (புதன்கிழமை) ஆலத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டமாணவர்களுக்கு 06.09.2024 (வெள்ளிக்கிழமை) வேப்பந்தட்டை வட்டாட்சியர் அலுவலகத்திலும், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு 11.09.2024 (புதன்கிழமை) வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் நடைபெறவுள்ளது. இம்முகாமில் கல்விக்கடன் பெற ஆலோசனைகள் வழங்கப்படு உள்ளது.
www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்த விண்ணப்ப நகல், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோரின் இரண்டு புகைப்படம், Joint Account பாஸ் புத்தகம், இருப்பிட சான்று நகல், வருமானச் சான்று நகல், சாதிச் சான்று நகல், PAN கார்டு நகல், ஆதார் அட்டைநகல், கல்லூரியில் இருந்து பெறப்பட்ட Bonafide சான்றிதழ், கல்லூரியில் இருந்து பெறப்பட்ட அசல் கல்விக் கட்டண விபரம், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மற்றும் இதர பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள், முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று, கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சேர்க்கைக்கான அசல் ஆணை ஆகியவை கல்விக் கடன் பெற தேவையானஆவணங்களாகும்.
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்விக் கடன் பெற தேவையான ஆவணங்களுடன் தங்கள் வட்டத்திற்குட்பட்ட இடங்களில் காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை நடைபெறும் கல்விக் கடன் வழங்கும் முகாமில் கலந்து கொண்டு உடனடியாக கல்விக் கடன் பெற்று பயன்பெறலாம்.
மேலும் விபரங்களுக்கு மாவட்ட முன்னோடி வங்கி அலுவலகத்தை நேரிலோ அல்லது அலுவலக தொலைப்பேசி எண் 04328 -277898, 94422 71994 என்ற எண்களில் தொடர்பு கொண்டு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்தக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.