Perambalur : Special Grievance Day meeting for differently abled: Collector provided assistive devices!
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அமர்ந்திருந்த இடத்திற்கே சென்று கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட கலெக்டர் ஒவ்வொருவரின் கோரிக்கைகளையும் கேட்டறிந்து அவற்றை நிறைவேற்ற உரிய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் இதர அரசுத்துறைகள் மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை, சுய தொழில் துவங்க வங்கி கடன், சிறப்பு சக்கர நாற்காலி, முட நீக்கு உபகரணங்கள், மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
10 மாற்றுத்திறனாளிகளுக்கு கண்ணாடி, சி.பி வீல்சேர், எல்போ ஊன்று கோல், பார்வையற்றோருக்கான கை கடிகாரம், கார்னர் சீட் உள்ளிட்ட ரூ.42,384 மதிப்பிலான பல்வேறு உதவி உபகரணங்களை கலெக்டர் கிரேஸ் பச்சாவ் வழங்கி, மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 63 கோரிக்கை மனுக்களை பெற்றார்.
இக்கூட்டத்தில், மாவட்ட மாற்றத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் கார்த்திக்கேயன், மாவட்ட பிற்படுத்தப்ட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சுரேஷ்குமார், சமூக பாதுகாப்புத்திட்ட வட்டாட்சியர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.