Perambalur: Special Grievance Redressal Meeting for Ex-Servicemen; Collector Information!
பெரம்பலூர் மாவட்ட முன்னாள் படைவீரர்களின் குடும்பத்தினர்கள் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கென சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 25.10.2024 (வெள்ளிக் கிழமை) மாலை 4.00 மணிக்கு கலெக்டர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கத்தில் நடைபெறவுள்ளது.
அன்றைய தினம், படைப்பணியில் பணிபுரிபவர்களை சார்ந்தோர்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக கலெக்டரிடம் நேரில் சமர்ப்பிக்கலாம். மேலும் மனுக்கள் அளிக்க விரும்புவோர் மனு மற்றும் தொடர்புடைய ஆவணங்களை இரு பிரதிகளாக அடையாள அட்டை நகலுடன் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.