Perambalur: special patta conversion camp ; Collector’s information!
தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட “உங்களை தேடி, உங்கள் ஊரில்” திட்ட சிறப்பு முகாம் வேப்பந்தட்டை வட்ட அளவில் நாளை நடைபெற உள்ளது.
இந்த சிறப்பு முகாமின்போது பட்டா மாறுதலுக்கான முகாம்களும் நடைபெறவுள்ளது. வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட வருவாய் குறுவட்டங்களில் உள்ள வெங்கலம் – கிராம நிர்வாக அலுவலர் அலுவலக கட்டிடம், பசும்பலூர் – வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் வாலிகண்டபுரம் – கிராம நிர்வாக அலுவலர் அலுவலக கட்டிடத்திலும் ”சிறப்பு பட்டா மாறுதல் முகாம்கள்” நடைபெற உள்ளது.
வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட பொதுமக்கள் அனைவரும் இம்முகாமில் பத்திரம், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து விண்ணப்பித்து ”சிறப்பு பட்டா மாற்ற முகாம்” சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டது கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.