Perambalur: Special Patta Shifting Camp “Ungalai thedi, ungal Uril Project” Collector Grace Pachuau Information!
தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட “உங்களைதேடி, உங்கள்ஊரில்” திட்டத்தின் படி, பெரம்பலூர் மாவட்டத்தில் வட்ட அளவில் பிரதிமாதம் 3வது புதன்கிழமை கலெக்டர் மற்றும் அனைத்து மாவட்ட முதல்நிலை அலுவலர்கள் கிராமங்களில் தங்கி களஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்தும், மக்களின் குறைகளைக் கேட்டறிந்து மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. வரும் அக்டோபர் 3வது புதன்கிழமை (16.10.2024) “உங்களைத்தேடி, உங்கள் ஊரில்” திட்டம் ஆலத்தூர் வட்டத்தில் நடைபெறுகிறது.
பொதுமக்களின் பெரும்பாலான கோரிக்கைகளான பட்டா மாற்றம், பட்டா திருத்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிடும் விதமாக ஆலத்தூர் வட்டத்தில் 16.10.2024 அன்று நடைபெறும் “உங்களைத்தேடி, உங்கள் ஊரில் சிறப்பு முகாம் திட்டத்தின் கீழ் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட செட்டிக்குளம் குறு வட்டத்திற்கு வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடத்திலும், கொளக்காநத்தம் குறு வட்டத்திற்கு கொளக்காநத்தம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்திலும் மற்றும் கூத்தூர் குறு வட்டத்திற்கு கூத்தூர் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்திலும் ”சிறப்பு பட்டா மாறுதல் முகாம்கள்” நடைபெறவுள்ளது. இம்முகாமில் பட்டா மாற்றம், பட்டா திருத்தம் தொடர்பாக விண்ணப்பிக்கும் நபர்கள் தங்கள் கிராமத்திற்குட்பட்ட குறுவட்டங்களில் நடைபெறும் சிறப்பு முகாமில் பத்திரம், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து விண்ணப்பித்து பயனடையுமாறு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துளள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.