Perambalur: Special voter list revision camp: Collector inspects the homes of applicants!

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர்களின் வசதிக்காக 01.01.2025 என்ற நாளை தகுதி நாளாகக் கொண்டு, சிறப்பு முகாம்களை நடத்திட அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் 16.11.2024 (சனிக்கிழமை). 17.11.2024 (ஞாயிற்றுக்கிழமை) 23.11.2024 (சனிக்கிழமை) மற்றும் 24.11.2024 (ஞாயிற்றுக்கிழமை ஆகிய விடுமுறை நாட்களில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் திருத்தம் செய்தல் உள்ளிட்ட சேவைகளுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இந்த முகாமில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் (படிவம்-6) 8,971, விண்ணப்பங்களும், பெயர் நீக்கல் (படிவம்-7) 4,265 விண்ணப்பங்களும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் (படிவம்-8) 7,610 விண்ணப்பங்களும் ஆக கூடுதல் 20,846 பெறப்பட்டுள்ளன.

இவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் கள விசாரனை செய்யப்பட்டது. கள விசாரணை மேற்கொண்ட விண்ணப்பங்களை மேலாய்வு செய்திடும் பொருட்டு,பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துறைமங்கலம் ஒளவையார் நகர், எம்.ஜி.ஆர் நகர், எளம்பலூர், ஈச்சம்பட்டி ஆகிய இடங்களில் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் வீடுகளுக்கே நேரில் சென்று மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கிரேஸ் பச்சாவ் விண்ணப்ப படிவத்தின் உண்மை நிலைகள் குறித்து கேட்டறிந்து சான்றுகளை பார்வையிட்டு மேலாய்வு செய்தார். அப்போது, பெரம்பலூர் தாசில்தார் சரவணன் உள்பட பல்வேறு அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

படவிளக்கம்:
பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூரில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த விண்ணப்பதாரர் ஒருவரின் வீட்டிற்கே சென்று கலெக்டர் கிரேஸ் பச்சாவ் மேலாய்வு செய்த போது எடுத்தப்படம்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!