Perambalur: Stop buying electricity from private individuals at exorbitant rates: Resolution in Minnaranga Inter-Committee Conference!
பெரம்பலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக கூட்டரங்கில் மின்னரங்க இடைக்கமிட்டி மாநாடு சங்க நிர்வாகி பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் அகஸ்டின் தொடக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் ரமேஷ், மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொது செயலாளர் ராஜேந்திரன் , கன்வீனர் ராஜேந்திரன் ஆகியோர் பேசினர்.
மின் துறையை தனியாரின் கொள்ளைகாடாக மாற்ற மின்சார சட்ட திருத்தம் கைவிட வேண்டும், மின் பகிர்மானத்தில் தனியாருக்கு அதிகாரம் வழங்கவும், மின் நுகர்வோர்கள் விநியோகஸ்தர்களை தேர்வு செய்ய வாய்ப்பளிக்க மின்சார் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வர முயற்சி மேற்கொண்டுள்ளது.
மின்சாரத்தை விநியோகித்து கட்டணங்களை வசூலிக்கும் சில்லரை வர்த்தகர்களை தனியாகவும் பிரிப்பது என்ற அடிப்படையில் மின் விநியோகிய கட்டமைப்பை பல தனியார் விநியோகிப்பாளர்கள் பயன்படுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் மின்சாரத்தை விநியோகிக்கும் பல சில்லரை விநியோகஸ்தர்கள் உருவாக்கும் வாய்ப்பு ஏற்ப்பட்டுள்ளது. மின்துறையை சீரழிக்கும் சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும்,
தமிழக மக்களுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்து தனியாரிடம் அநியாய விலை கொடுத்து வாங்குவதை தவிர்க்கவும், தமிழக மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை மத்திய அரசிடம் போராடிப் பெற்று வெளிநாட்டு நிலக்கரியை அதிக விலை கொடுத்து வாங்குவதை தவிர்க்கவும், போதிய ஊழியர்களை நியமித்து மின் எரிப்பு கணக்கீட்டை முறைப்படுத்தி கட்டணத்தை வசூலிக்க வேண்டும் எனவும்,
மின் வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கூலி மின் நுகர்வோரிடமிருந்து பெறப்பட்டு வழங்கப்படும் கேவலமான நிலை ஏற்பட்டுள்ளது. ஒப்பந்த ஊழியர்களின் உழைப்பை சுரண்டி விட்டு இல்லை என்று அறிக்கை அனுப்பும் நிலை உள்ளது. எனவே, உடனடியாக தமிழகம் முழுவதும் ஒரே சீராசு சிட் கே2 அக்ரிமெண்ட் மூலம் ஒப்பந்த ஊழியர்களுக்கு மின் வாரியமே சம்பளம் கொடுக்க வேண்டும். அவர்களை அடையாளம் கண்டு நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும்
காண்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கும். அனைவருக்கும் பென்சன் சமூக பாதுகாப்பு, விலைவாசி உயர்வை கட்டுபடுத்துவது. மின் வாரிய பிரிப்பு திட்டத்தில் உள்ள கடுமையான அம்சங்களை திரும்ப பெற கோருதல், மின் வாரியத்தில் காலியாக உள்ள 60,000 பணி காலியிடங்களை ஒப்பந்த தொழிலாளர்களை கொண்டும் ITI படித்தவர்களை கொண்டும் நிரப்பிட கோருதல், வேலைப்பளு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பதவிகளை அனுமதித்திட புதிய அலுவலங்கள் மற்றும் காலியிடங்களில் உடனடியாக பகுதிநேர ஊழியர்கள் பதவிகளை அனுமதித்து நிரப்பிடவும்,
தரமான தளவாட சாமான்கள் வழங்க கோரி, மின் வாரியத்தில் மின்விபத்து தவிர்க்க கோரியும்
ஒப்பந்த தொழிலாளர்களை வைத்து பணி மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளுக்கு நிரந்தர தொழிலாளர்ளுக்கு பணி பணிக்கப்படுவதை கைவிட கோரியும், குடிநீர் பிரச்சனையை போர்க்கால அடிப்படையில் தீர்த்திடுக. நீர் நிலையை பாதுக்காக்க கோரியும், காலி பணியிடங்களில் ஓய்வு பெற்றோரை கொண்டு நிரப்புவதை கைவிடக் கோரியும்,
வேகப்படுத்தப்படும் தனியார் மயம், வேலையின்மையை அதிகபடுத்தும் கொள்கைகளை கைவிடவும், மின் கட்டணத்தை கூடுதலாக பீக் நேரத்தில் அதிக வசூல் செய்யும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடவும், அரசாணை 100 ன் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து அரசு உத்தரவாதத்துடன் கூடிய முத்தரப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்திட வேண்டும் என பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.