Perambalur: Student admissions at Government Polytechnic College; Collector’s announcement!
பெரம்பலூர் மாவட்டத்தில் 2025 – 2026 ஆம் கல்வியாண்டிற்கு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு முழுநேரம் தொழில் பயிற்சியுடன் கூடிய பட்டயப்படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு https://www.tnpoly.in என்ற இணையதளம் மூலமாக நடைபெற்று வருகிறது. இணையதளம் வாயிலாக மாணவர்களுக்கு கீழக்கணவாய், அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியிலேயே விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்: ரூ.150 மட்டுமே ( மாணவர்கள் பதிவு கட்டணத்தை Credit Card, Debit card, மற்றும் Net Banking மூலமாக செலுத்தலாம் ) SC/ST மாணவ / மாணவியர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. இப்படிப்பிற்கு கல்வி கட்டணம் இல்லை சிறப்பு கட்டணம் மற்றும் வளர்ச்சிக் கட்டணம் – ஆண்டு ஒன்றுக்கு ரூ.2,200 மட்டுமே மூன்று ஆண்டுகளில் பட்டய படிப்பை ரூ.6,600- க்குள் படித்து முடித்து விடலாம். TNPAFC என்பது இம்மையத்தின் முகவரியாகும்.
முதுலாமாண்டு பட்டயச்சேர்க்கைக்கு கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி (SSLC/MATRICULATION) அல்லது அதற்கு இணையான கல்வி தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நேரடி இரண்டாமாண்டு பட்டயச்சேர்க்கைக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி, அதற்கு இணையான கல்வித் தகுதியில் தேர்ச்சி (HSC) அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சிக்கு பின்னர் 2 ஆண்டுகள் தொழில் பிரிவில் பயின்று தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். (10th std passed +2 years ITI (in any branch of Engineering and Technology) after 10th std passed.
மேலும், கீழக்கணவாய், அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் அமைப்பியல் துறை. (Civil) இயந்திரவியல் துறை (Mechanical) மின்னியல் மற்றும் மின்னணுவியல் (EEE) மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை (ECE) கணிப்பொறியில் துறை (Computer) ஆகிய தொழில் நுட்பக் கல்வி பாடப்பிரிவுகள் உள்ளன.
கீழக்கணவாய், அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் தரமான கல்வி மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்கள். ஸ்மார்ட் கிளாஸ் வசதி (Smart Class Room) அனைத்து வசதிகளுடன் கூடிய ஆய்வகங்கள் (Fully Equipped Laboratory), மாணவர்களுக்கு அரசு இலவச விடுதி, மாணவியர்களுக்கு கல்லூரிக்கு எதிரில் அரசு இலவச விடுதி, இருபாலருக்கும் அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
மாணவர் சேர்க்கை மற்றும் இணைய வழியில் விண்ணப்பிப்பது தொடர்பாக விவரங்கள் அறிய அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கீழக்கணவாய், பெரம்பலூர் – 621 104. நேரிலோ அல்லது 04328-243200, 243100, 99765 77570, 96266 52336, 90037 94703, 93613 57035 ஆகிய எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் கிரேஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.