Perambalur: Sub-Collector who showed cinema in the theater for students who lost their parents!
பெரம்பலூர் சப்-கலெக்டராக இருப்பவர் சு. கோகுல். பார்வையற்ற மாற்றுத் திறனாளியான இவர், பல்வேறு பணிகள் தொடர்பாக ஆய்வுக்கு சென்ற பொழுது அரசுப் பள்ளி ஒன்றில் பெற்றோர்களை இழந்த மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்பொழுது திரையரங்கம் மற்றும் திரைப்படம் குறித்த கேள்விக்கு சில மாணவர்கள் தாங்கள் இதுவரை தாங்கள் திரையரங்கையே பார்த்ததில்லை என்று தெரிவித்தனர். அவர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் பெற்றோர்களை இழந்த மாணவ மாணவிகளுக்கு இன்றைய தினம் காலை 11 மணிக்கு பெரம்பலூர் கிருஷ்ணா திரையரங்கில் திரைப்படம் கண்டு களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. திரைப்படத்தை காண வருகை தந்த மாணவர்களுடன் சப் – கலெக்டர் கோகுல் கலந்துரையாடி, மாணவர்களுடன் அமர்ந்து இருந்தார். மாணவர்கள் அனைவரும் ஆர்வமுடன் திரைப்படத்தினை பார்த்தனர்.
அப்போது தியேட்டர் உரிமையாளரும், முன்னாள் சேர்மனுமான மு.ராஜாராம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.