Perambalur: Subsidized loan for self-employment under PMEGP scheme; Collector Information!
குறுந்தொழில்கள் மற்றும் கிராமத் தொழில்களை ஊக்குவிக்கும் பொருட்டு பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (PMEGP), கீழ் மானியமாக 15% முதல் 35% வரை மானியத்துடன் கூடிய உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.50 லட்சம் வரையிலும் சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.20 லட்சம் வரையிலும், பெரம்பலுார் மாவட்ட தொழில் மையம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் தொழில் கடன் பெற்று சுய தொழில் செய்ய விரும்பும் ஆர்வமுள்ள பயனாளிகளிடமிருந்து http://www.kviconline.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இத்திட்டத்தில் உற்பத்தி பிரிவின் கீழ் ரூ.10 லட்சத்திற்கு மேல் திட்டமதிப்பீடு உள்ள தொழில்களுக்கும், சேவை பிரிவின் கீழ் ரூ.05 லட்சத்திற்கு மேல் திட்டமதிப்பீடு உள்ள தொழில்களுக்கும், குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தகுதியுடையவர்களாகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட தொழில் மையத்தை நேரிலோ அல்லது 89255 33977, 89255 33978 ஆகிய தொலைபேசி எண்களையோ அணுகி விவரங்களை அறிந்துகொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.