Perambalur : Subsidy for farmers to set up drip irrigation; Collector Info!

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பம் உள்ள விவசாயிகள் தங்களது நிலத்திற்கான சிட்டா, அடங்கல், நில வரைபடம், மண் மற்றும் நீர் ஆய்வு அறிக்கை, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போட் அளவு புகைப்படம் -2, சிறு/குறு விவசாயியாக இருப்பின் சிறு/குறு விவசாயி சான்று ஆகிய ஆவணங்களுடன் சம்மந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம் மூலமாகவோ அல்லது விவசாயிகள் தாங்களாகவே www.tnhorticulture.tn.gov.in/horti/mimis என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன் பெறலாம். இந்த இணையதளம் மூலம் தங்களுடைய வயலில் சொட்டு நீர் அமைக்கவிருக்கும் தேவையான பரப்பிற்கு மானிய கணக்கீட்டை பாசன இடைவெளி (Drip Spacing) வசதியுடன் அறிந்து கொள்ளலாம்.

இத்திட்டத்தில் ஏற்கனவே பயன் பெற்றுள்ள விவசாயிகள் தங்களுடைய மொத்த சொட்டு நீர் பாசன விண்ணப்ப தகவல்களையும் ஆதார் எண் (அ) நில புல எண் மற்றும் உட்பிரிவு எண் மூலம் அறிந்துக் கொண்டு பயன்பெறலாம். மேலும், சொட்டுநீர் பாசனம் அமைத்து 7 ஆண்டுகள் முடித்திருப்பின் அவர்களும் இத்திட்டத்தில் புதுப்பித்துக் கொண்டு பயன்பெறலாம். தெளிப்பு நீர் பாசனம் மூலம் ஏற்கனவே மானியம் பெற்ற விவசாயிகள் மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றிருந்தால், மானியத்தில் சொட்டு நீர் பாசனம் திரும்பவும் அமைத்துக் கொள்ளலாம்.

மேலும், சொட்டு நீர் பாசனம் அமைந்துள்ளவர்கள் சொட்டு நீர் பாசன குழாய்களில் ஏற்படும் உப்புகளை அமிலம் அல்லது குளோரின் கொண்டு நீக்குவதற்கு இணைய மூலம் பதிவு செய்து பயன்பெறலாம். நுண்ணீர் பாசன நிறுவன அமைப்பாளர்களின் விவரம் மற்றும் சொட்டு நீர் பாசன பராமரிப்பு வீடியோக்களும் இவ்விணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆகவே அனைத்து சொட்டு நீர் பாசன தகவல்களையும் அறிந்து கொண்டு பாசன வசதிகள் அமைத்து இத்திட்டத்தில் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விவசாயிகள் நுண்ணீர் பாசன நிறுவனங்களை தாங்களாகவே தேர்ந்தெடுக்கும் வசதியும் உள்ளது.

பெரம்பலூர் மாவட்ட விவசாய பெருமக்கள் அனைவரும் பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்தும் வகையில் தங்கள் பயிர் சாகுபடிக்கு நுண்ணீர் பாசன அமைப்புகளை ஏற்படுத்தி கூடுதல் வருவாய் பெற்று பயனடைய வேண்டும், எனன கலெக்டர் கிரேஸி பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!