Perambalur: Subsidy for installing solar power panels in homes; Collector informs!

மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ள “சூரியகர் சூரிய ஒளி மின் திட்டம்” கீழ் குடியிருப்புகளில் சூரிய ஒளி மின்சக்தி பேனல்கள் நிறுவுவதால் வீடுகளில் உற்பத்தி செய்யப்படும் யூனிட்களை மின் உபயோகத்துக்கு இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். மத்திய அரசின் உள்கட்டமைப்பு மானியம் கிடைக்கும், மின்சார கட்டணத்தில் அதிக அளவிலான சேமிப்பு கிடைக்கும், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற, பசுமை ஆற்றல் உற்பத்தியில் பொதுமக்களும் இணைந்து பங்காற்ற முடியும்.

தகுதி உள்ள பொதுமக்கள் https://pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து சூரிய ஒளி திட்டத்தின் நன்மைகளை பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தில் 1 KW சோலார் பேனல் அமைத்தால் ரூ 30,000 மானியமும், 2 KW சோலார் பேனல் அமைத்தால் ரூ.60,000 மானியமும், 3 KW அல்லது அதற்கு மேல் சோலார் பேனல் அமைத்தால் ரூ.78,000 மானியமும் வழங்கப்படும். இது குறித்த மேலும் தகவல்களுக்கு அருகிலுள்ள மின்சார அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என கலெக்டர் ச. அருண்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!