Perambalur Sugar Mill Stakeholders Consultation Meeting; Chief Executive Notice!
பெரம்பலூர் சர்க்கரை ஆலை பங்குதாரர்களின் நீண்டநாள் கோரிக்கையின் அடிப்படையில் முகவரி மற்றும் பங்கு மாற்றம் சம்பந்தமாக தமிழ்நாடு சர்க்கரைக் கழகத்தின் பொது மேலாளரின் தலைமையில் முகாம்கள் நடைபெற உள்ளது.
இம்முகாமானது 18.09.2024 காலை 10.00 மணியளவில் தாமரைப்பூண்டி கோட்ட அலுவலகத்திலும், மாலை 2.30 மணியளவில் அகரம் சீகூர் கோட்ட அலுவலத்திலும், 19.09,2024 அன்று காலை 10.00 மணியளவில் வி.களத்தூர் கோட்ட அலுவலகத்திலும், மாலை 2.30 மணியளவில் நாகலூர் கோட்ட அலுவலத்திலும், 20.09.2024 அன்று புதுவேட்டக்குடி மற்றும் மருதையான் கோவில் கோட்டங்களில் உள்ள பங்குதாரர்களுக்கு காலை 10.00 முதல் மாலை 5.30 வரை புதுவேட்டக்குடி கோட்ட அலுவலத்திலும், 21.09.2024 அன்று எறையூர் மற்றும் பெரம்பலூர் கோட்டங்களில் உள்ள பங்குதாரர்களுக்கு காலை 10.00 முதல் மாலை 5.30 வரை பெரம்பலூர் சர்க்கரை ஆலை அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும் என்றும்,
மேலும், இம்முகாமில் பெரம்பலூர் சர்க்கரை ஆலையின் பங்குதாரர்கள் பங்கு மாற்றத்திற்கு தேவையான உரிய ஆவணங்களுடன் (பங்குதாரர் இறந்திருப்பின் இறப்புச் சான்றிதழ், பங்குதாரர் உயிருடன் இருப்பின் சம்மதக் கடிதம்,வாரிசுச் சான்றிதழ், இதர வாரிசுதாரர்களின் சம்மதக் கடிதங்கள். பங்குச்சான்று தொலைந்திருப்பின் வழக்கறிஞரிடமிருந்து பெற்ற (Notary Public) பிரமாணப்பத்திரம்) ஆகியவற்றுடக் கலந்து கொண்டு பயன்பெறுமாறு பெரம்பலுர் சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி க.ரமேஷ் தெரிவித்துள்ளார்.