Perambalur: Supervisor killed in crusher loader machine!
திருச்சி மாவட்டம், பொன்மலை பகுதியை சோ்ந்த மதியழகன் மகன் ஹரிஹரன் (வயது 27). இவர் பெரம்பலூா் மாவட்டம் பாடாலூர் அருகே உள்ள திருவளக்குறிச்சியில் தனியாருக்கு சொந்தமான கிரசரில் சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் கிரஷருக்கு பணிக்கு ஹரிகரன் பைக்கில் சென்றார். அப்போது கிரஷர் உற்பத்தி செய்த ஜல்லி கற்கள் லாரிகளில் ஏற்றுவதற்காக லோடர் எந்திரத்தில் இருந்து ஜல்லிக்கற்கள் லாரிகளில் ஏற்றப்பட்டு கொண்டிருந்தன.
லாரியின் பின்புறம் சமமாக ஜல்லிக்கற்களை நிரப்புவதற்காக லோடர் எந்திரம் முன்னும், பின்னும் இயக்கப்பட்டு கொண்டிருந்தன. அப்போது எதிர்பாராத விதமாக பின்நோக்கி வந்த லோடர் ஹரிஹரன் ஓட்டி வந்த பைக் மீது மோதியுள்ளது. இதில் தடுமாறிய ஹரிஹரன் லோடர் எந்திரத்தின் மீது விழுந்து, அதில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஹரிகரனின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த போன ஹரிகரனுக்கு இன்னும் திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.