Perambalur: Tamil Nadu Govt., Integrated Technical Jobs Examination; Collector review!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு (பட்டயம் / தொழிற்பயிற்சி நிலை) பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்றது. இதில் தந்தை ஹேன்ஸ் ரோவர் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தை கலெக்டர் கிரேஸ் பச்சாவ் நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்த தேர்விற்காக பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து 529 நபர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் 317 நபர்கள் தேர்வெழுதினர். 212 பேர் தேர்வெழுத வரவில்லை. தேர்வு நடைமுறையினை கண்காணிக்க சார் ஆட்சியர் கோகுல் தலைமையிலான குழுவினரும், வட்டாட்சியர்கள் துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், துப்பாக்கி ஏந்திய காவலர், உதவியாளர் ஆகியோர் அடங்கிய இரண்டு நகரும் குழுக்களும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
தேர்வு மையங்களில் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்தும் கலெக்டர் பார்த்தார். நகராட்சி ஆணையர் ராமர், பெரம்பலூர் தாசில்தார் சரவணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.