Perambalur: Tamil Nadu Sand Truck Owners Association petitions demanding action against quarries that refuse to issue transit passes!
பெரம்பலூரில் கிரஷர்களில் இருந்து செயற்கை மணல் ஜல்லி உள்ளிட்ட கனிம பொருட்களை எடுத்துச் செல்லும் லாரிகள் ட்ரான்சிஸ்ட் பாஸ்கள் அவசியம் வைத்திருக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில், ட்ரான்சிஸ்ட் பாஸ் இல்லை என போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். அதனைக் கண்டித்து இன்று தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு சங்கத்தின் தலைவர் செல்ல.ராஜாமணி தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றைக் கொடுத்தனர். அதில், 2006 நீதிமன்ற உத்தரவுப்படி கனிம வள பொருட்களை எடுத்துச் செல்லும் பொருட்களுக்கு ட்ரான்சிஸ் பாஸ், வே பர்மிட் தேவை இல்லை என்பதால் லாரி ஓட்டுனர்கள் அதை எடுத்த செல்வதில்லை. ஜி எஸ் டி பில் போதுமானது. கலெக்டர் உத்தரவுப்படி ட்ரான்சிஸ்ட் பாஸ்சை குவாரி உரிமையாளர்கள் வழங்க மறுப்பதால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்று அந்த சங்கத்தை சேர்ந்தவர்கள் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரியிடம் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர், மேல் அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் தெரிவிப்பதாக தெரிவித்தார். பின்னர், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு சங்கத்தினர் கலைந்து சென்றனர்.