Perambalur: Tamil Putulavan Project: Launched by Minister Sivashankar; 3,278 students will get Rs.1,000 monthly!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதிய திட்டமான ”தமிழ்ப்புதல்வன்” என்ற சிறப்பான திட்டத்தை இன்று கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரியில் தொடங்கி வைத்தர்.
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மைக் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்ற தமிழ்ப்புதல்வன் திட்ட தொடக்க விழாவில், தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், கலெக்டர் கிரேஸ் லால் ரிண்டகி பச்சாவ் தலைமையில், கல்லூரி மாணவர்களுடன் நேரலையில் பார்வையிட்டார்.
பின்னர் 430 மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 பெறுவதற்கான பேங் டெபிட் கார்டுகளை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். பெரம்பலூர் எம்.எல்.ஏ., பிரபாகரன் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக, இச்சிறப்பு திட்டத்தை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக மாணவர்கள் நன்றி தெரிவிக்கும் விதமாக, 1000 மாணவர்கள் ஒன்றிணைந்து ”தமிழ்ப்புதல்வன்” என்ற எழுத்து வடிவில் நின்றனர்.
இந்நிகழ்ச்சியில் சப்-கலெக்டர் சு.கோகுல், யூனியன் சேர்மன்கள் பிரபா செல்லப்பிள்ளை (வேப்பூர்), மீனா அண்ணாத்துரை (பெரம்பலூர்), ராமலிங்கம் (வேப்பந்தட்டை), நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், பேரூராட்சித் தலைவர்கள், மாவட்ட ஊராட்சிக் கவுன்சிலர்கள் மகாதேவிஜெயபால், தழுதாழை பாஸ்கர், கருணாநிதி, உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், ஒன்றிய செயலாளர்கள், அரசு துறை பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.