Perambalur: Teacher’s Day Celebration at Siruvachur Almighty Public School!
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில், மாணவ – மாணவர்களின் நடனம், நாடக கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டது. ஆசிரியர்களுக்கான பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டது. இனிப்புகள், பூங்கொத்து கொடுத்து கவுரவிக்கப்பட்டனர். முதல்வர்கள் சாரதா மற்றும் சந்திரோதயம், துணை முதல்வர் எம்.ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினர். பள்ளியின் சேர்மன்முனைவர். ஆ. ராம்குமார் சிறப்புரை வழங்கினார். ஆசிரியர்கள் கலந்துரையாடினர். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, ஆசிரியர்கள் புகைப்படங்களை செடி போன்ற வடிவமைப்பில் அமைத்திருந்தனர்.