Perambalur: Teenager killed in bus overturn accident! 8 people were injured!!
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே ஆம்னி பேருந்து ஒன்று பள்ளத்தில் பாய்ந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 8 பேர் மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் இருந்து, சென்னை நோக்கி ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை வாவரையை சேர்ந்த அர்ஜுனன் மகன் அமர்நாத் (36) என்பவர் ஓட்டி வந்தார். பஸ் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது மேம்பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. அங்கு தோண்டப்பட்டு கிடந்த சாலையோர பள்ளத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பஸ் பள்ளத்தில் பாய்ந்தது. சம்பவ இடத்திலே பஸ்ஸில் வந்த கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு அருகே உள்ள மருதங்கோடு சேர்ந்த ரெத்தினன் மகன் அஜின் மோன் (25) பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் காயம் அடைந்த 8 பேரை பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.