Perambalur: Thanking the Chief Minister for the Ambedkar award, the resolution was passed in the special meeting!

வி.சி.க.-வின் பெரம்பலூர் கிழக்கு மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் மாவட்ட செயலாளர் அ.கலையரசன் தலைமையில் நடந்தது. தமிழ்நாடு அரசின் 2025ம் ஆண்டிற்கான அம்பேத்கர் விருது விசிக பொதுச் செயலாளர், விழுப்புரம் எம்.பி., து.ரவிக்குமாருக்கு வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்த நிர்வாக குழு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது என்றும்,

பொன்னகரம் கிராமத்தில் ஆதிதிராவிடர் மக்கள் காலங்காலமாக பயன்படுத்தி வந்த பொது பாதையை சாதி இந்துவை சார்ந்த ஒருவர் தனது பட்டா நிலம் என்று திடீரென முள்வேலி அமைத்து பாதையை தடுத்துள்ளார். மேலும் கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழக அரசால் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை, காங்கிரீட் பாலம் ,தண்ணீர் டேங்க் ஆகியவைகளை ஜேசிபி இயந்திரம் மூலம் உடைத்து தகர்த்து எரிந்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர், வருவாய் அலுவலர், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளிடமும் விசிக சார்பிலும் ஊர் பொதுமக்கள் சார்பிலும் கடந்த 6 மாத காலமாக பல்வேறு மனுக்கள் தொடர்ந்து கொடுத்து வந்துள்ளோம். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, இதை நிர்வாக குழு வன்மையாக கண்டிக்கிறது. மேலும் நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் கட்சியின் சார்பில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் விரைவில் நடைபெறும் என்றும்,

பள்ளகாளிங்கராயநல்லூர் கிராமத்தில் மணல் திருட்டில் ஈடுபட்ட சாதி இந்துக்கள் மீது காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது. இதை பொறுத்துக்கொள்ள முடியாத சாதி இந்துக்கள். ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் உள்ளே புகுந்து அடித்து உதைத்தனர். அவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் எனவும், குன்னத்தில் பெரம்பலூர் கிழக்கு மாவட்ட தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த காவல்துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,

பெரம்பலூர் மாவட்டத்தில், முன்னாள் மண்டல செயலாளர். ரா.கிட்டு தொடர்ந்து ழு அரசியல் செய்து மாவட்ட நிர்வாகத்திற்கும், கட்சிக்கும் எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். எனவே, அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகள் இருந்தும் நீக்கம் செய்ய வேண்டுமென தலைவருக்கு இந்த நிர்வாக குழு பரிந்துரை செய்கிறது என்றும்,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பொறுப்பு தலைவர் மறுசீரமைப்பில் பொறுப்பு அறிவிக்கும்வரை தற்காலிகமாக ஒகளூரை சேர்ந்த மா.சண்முகசுந்தரத்தை இந்த நிர்வாக குழு நியமனம் செய்கிறது என்றும், அவருக்கு வேப்பூர் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தருமாறு இந்த நிர்வாக குழு கேட்டுக் கொள்கிறது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மண்டல செயலாளர் பெ.அன்பானந்தம், மாநில செயலாளர் வீர.செங்கோலன், முன்னாள் மாவட்ட செயலாளர் சி.தமிழ்மாணிக்கம், நாடாளுமன்ற தொகுதி துணை செயலாளர் சா.மன்னர்மன்னன், மண்டல துணை செயலாளர்கள் ரா.ஸ்டாலின், பெ.லெனின், செ.வெ.மாறன், மாவட்ட துணை செயலாளர் ந.கிருஷ்ணக்குமார், மாநில துணை செயலாளர அ.தமிழ்குமரன், மா.அண்ணாதுரை, அ.பிரேம்குமார், மாவட்ட செய்தித் தொடர்பாளர் மு.உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!