Perambalur: The back door of the house was broken and 13 pounds of jewelery was stolen! Public shock!
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா து.களத்தூரை சேர்ந்தவர் மாதவன் (58). விவசாயி. நேற்றிரவு காற்றோட்டத்திற்காக தனது வீட்டை வெளிப்புறமாக பூட்டி விட்டு திண்ணையில் மனைவியுடன் தூங்கி கொண்டிருந்தார்.
இன்று அதிகாலை 5 மணிக்கு மாதவன் எழுத்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டினுள் சென்று பார்த்த போது பீரோவை உடைக்கபட்டு அதில் இருந்த 13 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் சம்வப இடத்திற்கு விரைந்து சென்ற பாடாலூர் போலீசார், மோப்பநாய் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையர்களின் அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஆக.29ந் தேதி தேனூரில் வீட்டில் கொள்ளை போனது. இதே போன்று அந்த சுற்றுவட்டார பகுதிகளில் கொள்ளை சம்பவங்களை தடுக்க பெரம்பபலூர் – துறையூர் சாலையில் உள்ள அடைக்கம்பட்டி புறக்காவல் நிலையம் மற்றும் திருச்சி மாவட்ட போலீசாருடன் இணைந்து, எல்லை பகுதிகளை ரோந்து பணியை அதிகரித்து கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.