Perambalur: The Collector gave free uniforms to the students of Aranarai School!
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரணாரை அரசு நடுநிலைப் பள்ளியில், 1 – 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அரசாங்கம் சார்பில் வழங்கப்படும் விலையில்லா பள்ளி சீருடைகளை கலெக்டர் கிரேஸ் பச்சாவ், இன்று காலை வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 87 பள்ளிகள், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 127 பள்ளிகள், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 105 பள்ளிகள், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 97 பள்ளிகள் என மொத்தம் 416 அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் 15,326 மாணவர்கள், 15,183 மாணவிகள் என மொத்தம் 30,509 மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளது. அதன் அடிப்படையில் இன்று அரணாரை அரசு நடுநிலைப் பள்ளியில் 124 மாணவ மாணவியர்களுக்கு பள்ளி சீருடைகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அண்ணாதுரை, பெரம்பலூர் நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன், பெரம்பலூர் தாசில்தார் சரவணன், பெரம்பலூர் யூனியன் மீனா அண்ணாதுரை, மாவட்ட நமூகநல அலுவலர் (பொ) ஜெயஸ்ரீ, வக்கீல் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.