Perambalur: The Collector handed over the keys of the Malayalapatti Government Community Center to the Women’s Self Help Group!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் மலையாளப்பட்டி ஊராட்சியில் ரூ.1.55 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தை கடந்த ஆக.14 அன்று காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கலெக்டர் கிரேஸ் பச்சாவ், சமுதாய கூட சாவியை, மலையாளப்பட்டியை விளாம்பழம் மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த 12 உறுப்பினர்களிடம் ஒப்படைத்தார்.