Perambalur: The Collector inaugurated the work of creating forests in Miyawaki with the help of international businessman DATO S PRAKADEESH KUMAR!

பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடி அருகே உள்ள பெரியம்மாபளையம் கிராமத்தில் மியாவாக்கி எனப்படும் குறுங்காடுகளை உருவாக்க 8.5 ஏக்கரில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை பன்னாட்டு தொழிலதிபர் மற்றும் கலெக்டர் கிரேஸ் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.

ஜப்பானில் வாழ்ந்த, யோகோஹாமா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய தாவரவியலாளரான அகிரா மியாவாக்கி என்பவர் கண்டுபிடித்த முறையாகும். இடைவெளி இல்லா அடர்காடு என்ற தத்துவப்படி, ஆழமான குழி தோண்டி அதில் மக்கும் குப்பைகளைக் கொட்டி நெருக்கமான முறையில் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நடும் முறைக்கு ‘மியாவாக்கி’ என்று பெயர்.
மியாவாக்கி முறையில் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையிலான மரங்கள் நடப்படும். 1,000 சதுரஅடி நிலத்தில் 400 மரங்கள் என்ற அடிப்படையில் மரக்கன்றுகள் நடப்படும். மியாவாக்கி முறையால் பூமியில் வெப்பம் குறையும், காற்றில் ஈரப்பதம் தக்க வைக்கப்படும், பறவைகளுக்கு வாழிடம் உருவாகும், பல்லுயிர்ச் சூழல் மேம்படும்.

வேம்பு, புளி, மகிழம், நீர் மருது, நாவல், இலுப்பை, மகாகனி, செம்மரம், தேக்கு, கொய்யா, புங்கன் உள்ளிட்ட பல்வேறு வகையான 1 லட்சம் மரக்கன்றுகளை வனத்துறை வழங்கியது. மியாவாக்கி அடர்வன பகுதி உருவாக்குவதற்காக பன்னாட்டு தொழிலதிபர் டத்தோ.பிரகதீஸ்குமார் சுமார் 5 லட்ச ரூபாய் மதிப்பில், 2 ஆழ்துளை கிணறுகள், பைப்லைன், மரக்கன்றுகளுக்கு சொட்டுநீர் பாசன வசதி மற்றும் மரக்கன்றுகள் நடவு செய்யப்படும் 8.5 ஏக்கர் நிலப்பரப்பினை முழுவதும் சீர்திருத்தம் செய்து, மரக்கன்றுகள் நடுவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.

ஈடன் கார்டன்ஸ் மாணவ மாணவிகள், பொதுமக்கள் அரசு பணியாளர்கள் பலரும் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வனத்துறையின் முழு ஒத்துழைப்போடு இந்த மியாவாக்கி அடர்வனக் காடுகள் உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மியாவாக்கி அடர்வனத்தை உருவாக்கும் பணியை கலெக்டர் உதவியாளர் வைத்தியநாதன் முன்னெடுத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!