Perambalur: The collector ordered to take steps to solve the demands of the farmers immediately in the farmers’ grievance day meeting!

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், விவசாயிகள் நீலகண்டன் பேசியதாவது: அரும்பாவூர் பகுதிகளில் தெரு நாய்களால் கால்நடைகள் பெரிதும் பாதிக்கப்படுவதால் அவற்றை கட்டுப்படுத்த வேண்டுமெனவும், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி மதகுகளை சீர் செய்திட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

ராஜீ : அடிக்கிணறு வெட்டுவதற்கு கடனுதவி வழங்கவேண்டுமெனவும், குடிநீர் பற்றாக்குறை இன்றி வழங்க வேண்டுமெனவும்,

பாலகிருஷ்ணன்: பயிர் காப்பீடு செய்தவர்களுக்கு இழப்பீடு தொகை விரைவில் வழங்க வேண்டுமெனவும்,

ராமராஜன்: விவசாயிகளுக்கு விதை நேர்த்தி செய்த விதைகள் வழங்க வேண்டும், கொட்டரை நீர்த்தேக்கம் பணியை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமெனவும்,

விநாயகம்: தெரணி பகுதியில் குரங்கு தொல்லைகள் அதிகமாக இருப்பதால் அதனை கட்டுப்படுத்திட வேண்டுமெனவும்,

மணி: சின்ன வெங்காயத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டுமெனவும், வேலூர் கிராம அரசு மருத்துவமனை அருகில் நிழற்கூடம் அமைத்த தர வேண்டுமெனவும்,

வரதராஜன்: மின்சார கட்டணம் ஒவ்வொரு மாதமும் கட்டணம் செலுத்தும்படி வழிவகை செய்ய வேண்டுமெனவும்,

ரகு : வெங்காய விதைகளில் வரும் நோய்களை தடுக்க வழிவகை செய்ய வேண்டுமெனவும் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க வேண்டுமெனவும்,

ராஜாசிதம்பரம்: நில மோசடியை தடுக்க வேண்டுமெனவும், கோரிக்கை விடுத்தனர்.

விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை உடனுக்குடன் விளக்கம் சொல்ல அறிவுறுத்திய கலெக்டர் கிரேஸ் பச்சாவ், அனைத்து கோரிக்கைகளின் மீதும் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அனைத்து துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டார்.

. பெரம்பலூர் மாவட்டத்தின் வருடாந்திர சராசரி மழையளவு 861 மி.மீ, ஆகும். 2024 ஜூலை மாதம் பெய்ய வேண்டிய மழையளவு 38 மி.மீ., பெய்த மழையளவு 16.91 மி.மீ, ஆகும்.

பயிர் சாகுபடி பரப்பை பொறுத்தவரை தற்சமயம் 699 எக்டர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விதை கொள்முதலை பொறுத்தவரை விவசாயிகள் பயன்பாட்டிற்காக நெல் 82.609 மெ.டன்கள், சிறுதானியங்களில் 2.730 மெ.டன்கள், பயறு வகைகளில் 2.281 மெ.டன்கள், எண்ணெய்வித்து பயிர்களில் 20.704 மெ.டன்கள் இருப்பில் உள்ளது. அதனைத்தொடர்ந்து முன்னதாக, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையினரால் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. அனைத்து துறைகளின் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!