Perambalur: The consumer commission ordered the postal officials who did not deliver the letter to pay Rs. 10,000 as compensation!
பெரம்பலூர் நகராட்சியில் உள்ள துறைமங்கலத்தை சேர்ந்தவர் சசிகுமார். இவருக்கும் துறைமங்கலம் அரசு ஊழியர் குடியிருப்பில் வசித்து வரும் செல்லையா என்பவருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் இருந்தது. செல்லையா கொளக்காநத்தம் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் வாகன டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அந்த அடிப்படையில் சசிக்குமார், செல்லையாவிற்கு அவரது குடும்ப செலவிற்காக ரூ.1லட்சம் கடன் கொடுத்திருந்தார். அதற்காக செல்லையா கடனுடன் வட்டியுமாக சேர்த்து ரூ.1 லட்சத்து 42ஆயிரத்தை காசோலையாக சசிகுமாருக்கு திருப்பி தந்துள்ளார். ஆனால், சசிகுமார் தனது வங்கி கணக்கில் அந்த காசோலையை செலுத்தியபோது, செல்லையா வங்கி கணக்கில் போதிய பணமின்றி காசோலை திரும்பி வந்துவிட்டது. அதற்காக வழக்கு தொடுக்க செல்லையாவிற்கு சசிகுமார் தனது வழக்கறிஞர் மூலமாக செல்லையாவிற்கு அவரது வீடு, அவர் பணியும் இடத்திற்கு பதிவு தபால் அனுப்பினார். ஆனால், அந்த பதிவு தபாலை துறைமங்கலம் மற்றும் கொளக்காநத்தம் துணைத் தபால்அலுவலகங்கள் மூலம டெலிவரி செய்யாமல் அந்த தபாலை அப்படியே வைத்து விட்டனர். இதனால் சசிகுமார், காசோலை மோசடி தொடர்பாக செல்லையா மீது வழக்கு தொடுக்க முடியாமல் போனது.
இதனால் மனஉளைச்சல் அடைந்து பாதிக்கப்பட்ட சசிகுமார், பெரம்பலூர் தலைமை தபால் அலுவலர், துறைமங்கலம் துணை தபால் நிலைய அலுவலர் மற்றும் கொளக்காநத்தம் துணை தபால்நிலைய அலுவலர் ஆகிய 3பேர் மீதும் பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் தனது வழக்கறிஞர் மூலம் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை பெரம்பலூர் நுகர்வோர் ஆணைய நீதிபதி ஜவஹர், மற்றும் உறுப்பினர்கள், திலகா மற்றும் முத்துகுமரன் ஆகியோர் பகுதியாக அனுமதித்து விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் தபால் துறையினரின் சேவை குறைபாடு காரணமாக மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணத் தொகையும், ரூ.10ஆயிரத்தை வழக்கு செலவுத் தொகையும், எதிர்மனுதாரர்கள் வழக்கின் தீர்ப்பு கிடைக்கப் பெற்ற 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் வழக்கு தாக்கல் செய்த நாளில் இருந்து 8 சதவீத ஆண்டு வட்டியுடன் வழங்க வேண்டும் என்றும், முதல் எதிர்மனுதாரர் மீதான வழக்கை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர்.