Perambalur: The couple tried to set fire on them in collector’s office for dividing the family property!
பெரம்பலூர் அருகே உள்ள எசனை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் செல்லையா மகன் ஸ்ரீதரன். இவர் இன்று காலை பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் தனது குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்றார்.
மண்ணெண்ணெய் உடலில் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொள்ள முடிகின்ற வரை போலீசார் தடுத்து நிறுத்தி அவரிடம் நடத்திய விசாரணையில், அவர்களுக்கு திருமணம் ஆகி 4 வருடங்கள் ஆகிறது என்றும், மனைவி காஞ்சனா, மகன் கருப்புசாமி (2) வசித்து வரும் நிலையில், ஸ்ரீதரனின் தந்தை செல்லையா 2019 ஆம் தேதி அன்று இறந்துள்ளார்.
பிஎஸ்என்எல் லில் வேலை செய்த செல்லையாவிற்கு, ஓய்வூதிய பணலப்பலன்கள் ரூ..20 லட்சத்தை தாயாரும், அவரது அண்ணன் செண்பகராமன் ஆகிய இருவரும் மத்திய கூட்டுறவு வங்கியில் மறைத்து வைத்து கொண்டு, தனக்கு உரிய பங்கை பிரித்து தர மறுப்பதாகவும், தந்தையின் நிலுவைத்தொகை ரூ.18 லட்சம் என மொத்தம் 38 லட்சம் ரூபாய் மற்றும் இதர சொத்துக்களில் தனக்கு பங்கு தர மறுப்பதாகவும், இது குறித்து பல்வேறு துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் தனக்கு உரிய நியாயம் கிடைக்காததால் அவர் இன்று காலை பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் கேனுடன் வந்து குடும்பத்தினருடன் தீ குளிக்க முயன்றது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவம் இன்று காலை பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அங்கிருந்த பணியில் இருந்த போலீசார் அவர்களுக்கு உரிய அறிவுரை கூறினர்.