Perambalur: The court ordered the land survey-revenue department to provide relief of Rs.20 thousand to the farmer!

பெரம்பலூர் விவசாயிக்கு ரூ.20ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க நிலஅளவையர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மாவட்ட நுகர்வோர; குறைதீர்க்கும் ஆணையம் உத்திரவிட்டடுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், கீழப்புலியூர் அருகே உள்ள கே.புதூரை சேர்ந்தவர் பெரியசாமி. கீழப்புலியூர் எல்லையில் பெரியயசாமியின் தந்தை முத்துசாமி பெயரில் உள்ள பூர்வீக நிலங்கள் உள்ளன. முத்துசாமி இறந்தபிறகு அவரது வாரிசுதாரர் என்ற அடிப்படையில் பெரியசாமி தனது பெயருக்கு பட்டா மாறுதல் செய்து கணினி முறையில் புதிய பட்டா வழங்குமாறும், 3 நிலங்களின் உட்பிரிவுகளை அளந்து எல்லை காட்டுமாறு குன்னம் தாலுகா அலுவலத்தில் முறையே ரூ.2400 மற்றும் ரு. 1600 கட்டணம் செலுத்தி 24.1.2022 அன்று விண்ணப்பித்தார்.

விண்ணப்ப மனுவை பெற்றுக் கொண்ட வருவாய்த்துறை, நிலஅளவையர் துறையினர் பெரியசாமி பெயருக்கு பட்டா மாற்றித்தராமல் சுமார் 2 ஆண்டுகள் அவரை அலையவிட்டனர்.

இதனால் மனஉளைச்சல் அடைந்த பொpயசாமி, பெரம்பலூர; மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் தனது வழக்கறிஞர் மூலம் கீழப்புலியூர் குறுவட்ட நிலஅளவையர், குன்னம் வட்ட துணை ஆய்வாளர், குன்னம் தாசில்தார் ஆகிய 3 பேர் மீதும் புகார் மனுசெய்து வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை பகுதியாக அனுமதித்து விசாரணை நடத்திய நுகர்வோர் ஆணைய நீதிபதி ஜவஹர், மற்றும் உறுப்பினர்கள், திலகா மற்றும் முத்துகுமரன் ஆகியோர் நிலஅளவைத் துறையினர் மற்றும் வருவாய்த்துறையினரின் சேவை குறைபாடு காரணமாக மனஉளைச்சலுக்கு ஆளான மனுதாரருக்கு ரூ.10ஆயிரம் நிவாரணத்தொகையும், ரூ.10ஆயிரம் வழக்கு செலவுத்தொகையும், எதிர்மனுதாரர்கள் அளிக்கவேண்டும். தீர்ப்பு வழங்கிய 4 வாரங்களுக்குள் மனுதாரரின் நிலத்தை அளந்து அத்து (எல்லை) காட்டி, அதற்குரிய ஆவணத்தை வழங்கவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!