Perambalur: The District Mahila Magistrate Court sentenced the woman who poisoned her mother and younger sister for property to double life imprisonment!

பெரம்பலூர் அருகே சொத்துக்காக தனது தாய் மற்றும் சகோதரியை கொலை செய்த இரட்டை கொலை வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பெண்ணிற்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

 பெரம்பலூர் மாவட்டம்,  மருவத்தூர் போலீஸ் ஸ்டேசன் எல்லைக்கு உட்பட்ட அய்யலூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழரசு மனைவி ராணி (68) , சங்கர் மனைவி ராஜேஸ்வரி (28)ஆகிய இருவரும் கடந்த 2020ம் ஆண்டு, வாயில் நுரையுடன் வீட்டில் இறந்து கிடந்ததாகவும் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி மருவத்தூர் போலீசில் அளித்த புகாரைப் பெற்ற சப்- இன்ஸ்பெக்டர் கண்ணுசாமி வழக்கு பதிவு செய்தார். 

இந்த வழக்கினை விசாரித்த மருவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி, அதே ஊரை சேர்ந்த இறந்த ராணியின் மகளான வள்ளி (35)-யை விசாரணை செய்ததில் அவர் மீது சந்தேகம் வரவே அவரை விசாரணை வளையத்தில் கொண்டு வந்து நடத்தீய விசாரணை செய்ததில் அவர்தான் சொத்திற்காக தனது அம்மா மற்றும் தங்கை ஆகிய இருவரையும் விஷம் வைத்து கொலை செய்தது தெரியவந்தது.

நீதிமன்றத்தில் குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்குப் பின் இன்று வழக்கின் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இவ்வழக்கின் குற்றவாளியான ராம்குமார் மனைவி வள்ளிக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனை ரூ.10 ஆயிரம் அபராதத்தை விதித்தும் அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 2 வருடம் சிறை என்றும் பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி இந்திராணி உத்தரவிட்டார்.

பின்னர், போலீசார் வள்ளியை சிறையில் அடைத்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!