Perambalur: The DMK regime must be ousted—IJK founder Parivendhar declares while campaigning in support of Saranya, the party’s candidate for the Kunnam constituency.

பெரம்பலூர்: திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும்; குன்னம் தொகுதியில் ஐஜேகே வேட்பாளர் சரண்யாவை ஆதரித்து பிரச்சாரம் செய்த அக்கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் பேச்சு!

குன்னம் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் சரண்யா அன்பழகனை ஆதரித்து பெரம்பலூர் மாவட்டம், அகரம் சீகூர் பார்டர் பகுதியில் அக்கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்குகளை சேகரித்தார்.

பரப்புரைக்கு வந்த நிறுவனர் பாரிவேந்தருக்கு தேசிய ஜனநாயக கூட்டணியினர் வானவேடிக்கைகயுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பாரிவேந்தர் பேசியதாவது:

மக்கள் கூட்டத்தை பார்த்தால், வெற்றி பெற்றதாக தெரிகிறது. இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும். மக்களை பற்றி கவலைப்படாத ஆட்சி, கொடுமையான ஆட்சி, திமுக அரசாங்கம் அகற்றப்பட வேண்டும், திமுக வெற்றி பெற்றவுடன் என்ன வாக்குறுதி கொடுத்தார்கள்?

நீட் தேர்வை ரத்து செய்வோம் என தெரிவித்தனர். திமுக அரசு எதனையும் பற்றி கவலைப்படாமல் உள்ளனர். ஆட்சி மாற்றம் வேண்டும், சொன்னதை செய்யவில்லை, வாக்குறுதியை நிறைவேற்றாத அரசு திமுக அரசு.
கடந்த தேர்தலில் ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்தீர்கள், அவர்கள் வாக்குறுதியை நிறை வேற்ற வில்லை.

எம்.ஜி.ஆர்.கண்டெடுத்த சின்னம் எது? இரட்டை இலை! அவற்றை தொடர்ந்து பின்பற்றி வந்த எடப்பாடியார் விவசாயக்குடும்பத்தில் பிறந்து படிப்படியாக முன்னேறி உள்ளார்.

திமுக குடும்பம் பொழுதுபோக்கு குடும்பம், நாடக கம்பெனி. எல்லா மக்களும் தங்களுக்கு ஓட்டு போடுவார்கள் என திமுக கற்பனை உலகத்தில் உள்ளனர். கற்பனை உலகத்தை உடைக்க வேண்டும். இன்னும் கொஞ்ச நாள் தமிழ்நாடு எங்களுடைய சொத்து என்பார்கள். தமிழ்நாட்டில எங்கு பார்த்தாலும் அவங்க அப்பா சிலை, தெருவிற்கு அவரது அப்பா சிலை.

வரி தமிழ்நாட்டில் எல்லோரும் வரிகட்டுகிறீர்கள். அது ஏறத்தாழ ரூ. 3 லட்சத்து 20 ஆயிரம் கோடி! ஆனால், முழுமையாக திரும்ப வரவில்லை. அந்த பணத்தை நல்ல பள்ளிக்கூடம், மருத்துவமனை, சாலைகள், கல்லூரிகள் உண்டாக வேண்டும். இதெல்லாம் பெயரளவிற்குதான் உள்ளது.

கடந்த தேர்தலில் திமுகவினர் கொடுத்த வாக்குறுதிகளில் அகரம் சீகூர் பகுதியில் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என தெரிவித்தனர், அதுவரவில்லை. மதுக்கடைகள் மூடப்படவில்லை. அரசு, தனியார் வங்கிகளை கொண்டு வரவில்லை. இந்த பகுதிக்கு தனி யூனியன் அமைத்து கொடுக்கவில்லை.

வேட்பாளர் சரண்யாவை இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெறச் செய்தால், ஆண்டுக்கு நூறு பேருக்கு இலவச கல்வி வழங்கப்படும். இப்பகுதியில் பா.மக மிகப் பெரிய சக்தியாக உள்ளது. I J K – NDA, அதிமுகவுடன் தோழமையுடன் உள்ளோம். குன்னம் ஐ.ஜே.. கே வேட்பாளர் சரண்யா அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும், வாக்குறுதி கொடுப்பார்கள், செய்ய மாட்டார்கள்.

இந்த பரப்புரை பயணத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சேர்ந்த அதிமுகவை சேர்ந்த துணை சபா நாயகர் வரகூர் அருணாச்சலம், முன்னாள் எம்.பி சந்திரகாசி, பா.ம.க மாவட்ட செயலாளர் செந்தில்குமார், அமமுக கார்த்திகேயன், பாஜக, தாமக, இந்திய ஜனநாயக கட்சியை சேர்ந்த பொதுச் செயலாளர் சண்முகம், மாவட்டத் தலைவர் அன்பழகன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், நிர்வாகிகள், பெண்கள் உள்பட திரளான போது மக்கள் கலந்து கொண்டனர். இதே, செந்துறை, ஆர்.எஸ். மாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!