Perambalur: The door of the house was broken and about Rs. 5 lakh worth of gold jewelery stolen!
பெரம்பலூர் அருகே தேனூர் கிராமத்தில் வெளியூர் சென்றவர்கள் வீட்டில் பின்பக்க கதவை உடைத்து வீட்டில் இருந்த 9 பவுன் தங்க நகைகளை கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலூக, தேனூரை சேர்ந்த பாலச்சந்தர் (60) – ராணி (55) தம்பதியினர். திருப்பூரில் இருந்த ராணி தனது சொந்த ஊரான தேனூரில் உள்ள வீட்டில் கடந்த ஆக. 26ம் தேதி 9 பவுன் நகைகளை வீட்டில் வைத்து விட்டு, அருகில் உள்ள தனது தாய்வீடான தெற்கு திருபத்தூருக்கு கணவன் – மனைவி இருவரும் சென்றுவிட்டு இன்று காலை திரும்ப வந்து வீட்டை பார்த்த போது, வீட்டின் பின்பக்க கதவு மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு, பொருட்கள் சிதறி கிடைப்பதை அறிந்த அவர்கள், வீட்டினுள் சென்று பார்த்த போது, தங்க சங்கிலி, மோதிரம், காசு என மொத்தம் 9 பவுன் தங்க நகைகள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.
உடனே, பாடாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாடாலூர் போலீசார், மோப்ப நாய் மற்றும், தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்னர். இச்சம்பவம் இன்று காலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.