Perambalur: The driver stopped the bus across the road after hearing that the woman had been transferred to another town at night, creating a commotion!

பெரம்பலூர் அருகே உள்ள செஞ்சேரியை சேர்ந்தவர் பழனிச்சாமி மனைவி கலா. நேற்றிரவு பெரம்பலூரில் இருந்து செஞ்சேரிக்கு, துறையூர் வழியாக செந்தாரப்பட்டி செல்லும் தனியார் பேருந்தில் ஏறி செஞ்சேரிக்கு பஸ் டிக்கட் எடுத்துள்ளார். செஞ்சேரி பஸ் ஸ்டாப் வந்த உடன் பஸ்சை நிறுத்துமாறு கலா கூறியுள்ளார். ஆனால், பஸ் செஞ்சேரி அடுத்துள்ள ஈச்சம்பட்டியில் நிறுத்தி விட்டுள்ளனர். பின்னர், கலா அங்கிருந்து தனது கணவரை வரச் சொல்லி, செஞ்சேரி வந்தடைந்துள்ளார்.

இன்று காலை அந்த பேருந்து பெரம்பலூர் நோக்கி வந்த போது, பழனிச்சாமி பஸ் ஸ்டாப்பில் நின்ற போது, ஏன் இரவு நேரத்தில் ஊர் மாற்றி இறக்கி விட்டு செல்கிறீர்கள் என கேட்ட போது, ஆத்திரமடைந்த பஸ் டிரைவர் பஸ்சை பெரம்பலூர் – துறையூர் சாலையில், போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி மறியல் செய்தார். பஸ்சில் வந்த பயணிகள் போலீசாருக்கு கொடுத்த தகவலின் சம்பவ இடத்திற்கு பேட்ரோல் போலீசார், ஆலம்பாடி ஊராட்சித் தலைவர் கல்பனா சீனிவாசன் ஆகியோர் பஸ் டிரைவருக்கு அறிவுரை கூறி பேருந்தை எடுக்க அறிவுறுத்தினர். மேலும், பெண் பயணியை இரவு நேரத்தில், ஊர் மாற்றி இறக்கி விட்டதற்காக பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு பஸ் டிரைவரின் லைசென்சை ரத்து செய்ய பரிந்துரை செய்துள்ளனர். மேலும், பெரம்பலூர் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரவு நேரத்தில் பெண் பயணியை உரிய நிறுத்தத்தில் இறக்கிவிடாமல், தட்டி கேட்டதற்கு டிரைவர் சாலை மறியல் நடத்திய சம்பவம் இன்று காலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரசு பேருந்துகளே இரவு நேரத்தில் பெண் விரும்பும் நிறுத்தத்தில் இறக்கி விட்டு செல்லும் நிலையில் தனியார் பேருந்து தறிகெட்டு செல்வதற்கு கடிவாளம் போடவேண்டும் என பொதுமக்ககள் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு கோரிக்கைக விடுத்துள்ளனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!