Perambalur: The first campaign of ‘Vellum Tamil Women’ in Pasumbalur; launched under the leadership of DMK District Women’s Wing Mahadevi Jayapal!

பெரம்பலூர் மாவட்டம், பசும்பலூரி திமுக மகளிரணி சார்பில் ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ முதல் பிரச்சாரம் மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால் தலைமையில் நடந்தது.
அக்கிராமத்தில் வீடு, வீடாக சென்று அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தனர். மேலும் க்யூ ஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்து, முதலமைச்சர் மு.க.க.ஸ்டாலின் பேசும் வீடியோ வாயிலாகவும், துண்டு பிரசுரங்களையும் வழங்கினர். வீடு தோறும், ‘ஸ்டாலின் தொடரட்டும் -தமிழ்நாடு வெல்லட்டும்’ எனும் ஸ்டிக்கர்களை வீடுகளில் ஒட்டினர்.
இப்பிரச்சாரத்தில், மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் ஆகியோர் பசும்பலூர் நிகழ்வில் பங்கேற்றனர். பெரம்பலூர் தொகுதி திமுக பார்வையாளர் தங்க.சித்தார்த்தன், மாவட்ட திமுக பொருளாளர் செ. ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் ந.ஜெகதீஷ்வரன், மாவட்ட பிரதிநிதி எஸ்.அழகுவேல், செல்வம், கிளைச் செயலாளர் ஜெயபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.











kaalaimalar2@gmail.com |
9003770497