Perambalur: The gang broke into the house in broad daylight and robbed Rs 1.30 lakh! They attacked the old man who stopped them! A member of the gang was caught!!
பெரம்பலூர் அருகே உள்ள நெடுவாசல் கிராமம். அந்த கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி (65). இவர் வீட்டிற்கு இன்று மாலை 2 பைக்கில் மது போதையில் வந்து 4 கொள்ளையர்கள் பூட்டியிருந்த பொன்னுசாமியின் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டினுள் பீரோவில் இருந்த ரொக்கம் ரூ.1.30 லட்சத்தை கொள்ளையடித்து கொண்டு தப்பி செல்ல முயன்றனர்.
அப்போது, சத்தம் கேட்டு வீட்டினுள் சென்ற பொன்னுசாமி கொள்ளையர்களை தடுத்தார். அப்போது பொன்னுசாமியை கொள்ளையர்கள் சராமாரியாக தாக்கினர். வலி தாங்கமுடியாமல் அலறிய பொன்னுசாமியின் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்தனர். இதையறிந்த கொள்ளையர்கள் பணத்துடன் தப்பி ஓடினர். அந்த கும்பலில் ஒருவன் மட்டும் பொதுமக்கள் கையில் சிக்கினான். தர்ம அடி சிறப்பாக கவனித்தனர்.
பின்னர், தாக்குததில் படுகாயமடைந்த பொன்னுசாமியை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்ததையடுத்து,
திருடனை பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
திருடனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா மருவத்தூரை சேர்ந்த வாசுவேதன் மகன் முருகராஜ் (27) என்பதும், அவனது நண்பர்கள் சுரேஷ் உள்பட 4 பேர் என தெரியவந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய குற்றவாளிகளை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.